தமிழ் – தமிழ்நாடு என பாசாங்கு செய்த பாசிஸ்ட்டுகளின் முகமூடி தேர்தல் முடிந்ததும் கிழிந்து தொங்குகிறது என இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வளைத்தபக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“UnionBudget2024-ல் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை கழகம் இன்று நடத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப்பணிகளுக்கு – இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட துயர் துடைக்க – தொழில் & நகர்ப்புர வளர்ச்சிக்கு என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியில்லை. சுருக்கமாக சொன்னால், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடே இல்லை.
இதையும் படிங்க : DMK கூட்டணிக்குள் புகைச்சல்? BUDGET எதிர்ப்பு போராட்டத்தில் கிடைத்த CLUE !
தமிழ் – தமிழ்நாடு என பாசாங்கு செய்த பாசிஸ்ட்டுகளின் முகமூடி தேர்தல் முடிந்ததும் கிழிந்து தொங்குகிறது.
மோடியின் பலவீனமான பதவி நாற்காலியின் கால்களுக்கு வலுவூட்டும் பட்ஜெட்டை விட, அனைத்து தரப்பு மக்களும் எழுந்து நிற்பதற்கு ஊன்றுகோல் தரும் பட்ஜெட் தான் நாட்டுக்குத் தேவை.
நிதி ஒதுக்கீட்டில் இனியும் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடர்ந்தால், கழகம் நடத்தியுள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள், நாளை மக்கள் போராட்டங்களாக மாறிவிடும் என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் (Udhayanidhi Stalin).