அரசு ஊழியரை கோவத்துடன் திட்டிய அமைச்சர் K.N.நேரு (KNnehru) செயல் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கீழ், ரூ.6.58 கோடி மதிப்பீட்டில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதியம்மாள் நகர் மற்றும் அரசு பண்ணை பகுதிகளில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகளை,மருத்துவம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் நேரு தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திட்டப்பணிகளைத் தொடங்க அடிக்கல் நாட்டு விழா பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது அருகில் நின்று கொண்டு இருந்த அரசு அதிகாரி ஒருவரை “யோவ் நகருயா”.. என்று கோவத்துடன் அமைச்சர் KN நேரு திட்டினார். மேலும் இந்த சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.