நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டலூர் கேட் அருகே உள்ள பாரக்கல்புதூர் அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற திங்கட்கிழமை நடைபெற உள்ளது.இந்த நிலையில் கோவிலில் முதற்கட்ட பூஜையாக கணபதி ஹோமம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
கணபதி ஹோமம் நடைபெற்றதை அடுத்து பக்தர்கள் கோவிலில் இருந்து ஆண்டலூர் கேட் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சென்று தரிசனம் செய்தனர். பின்னர் விநாயகர் கோவிலில்ருந்து 2000க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் ஆனது ஆண்டலூர் கேட் பகுதியில் தொடங்கி பாலப்பாளையம், குருக்கபுரம் மற்றும் முக்கிய சாலைகளின் வழியாக தீர்த்தப் குடங்களை எடுத்து பாரக்கல்புதூரில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில்க்கு சென்றடைந்தனர். தீர்த்து கூட ஊர்வலத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.