மலேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தில் 10 பேர் உடல்கருகி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
மலேசிய நாட்டின் பிரபல சுற்றுலாத்தலமான லங்கா தீவிலிருந்து 8 பேர் சிறிய ரக பீச் கிராஃப்ட் விமானத்தில் சிலாங்கூர் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததையடுத்து, விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றுள்ளார்; அப்போது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
விமானம் தீடீரென தீப்பிடித்து எரிந்ததால் தப்பிக்க வழியின்றி அதில் பயணித்த விமானி உளப்பட 10 பேர் விபத்தில் சிக்கி துடிதுடித்து இறந்துள்ளனர் .
மலேசியாவில் ஆனந்தமாய் சுற்றுலா சென்ற 10 பேர் விமான விபத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .