லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இளம் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் . இதுவரை 5 சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து கூலி படத்தை இயக்கி வருகிறார்.
Also Read : அண்ணலை அவமதித்த அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – தவெக தலைவர் விஜய் காட்டம்..!!
இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்து லோகேஷ் தற்போது பல படங்களை தயாரித்து வருகிறது . அந்தவகையில் தற்போது இவரது தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
நிரஞ்சன் இயக்கத்தில், பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்திற்கு ‘மிஸ்டர் பாரத்’ என பெயரிடப்பட்டுள்ளது .
இதோ ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ப்ரோமோ…