பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி காரணமாக மழை குறுக்கிட்டது. பின்னர், நள்ளிரவு 12 .10க்கு ஆட்டம் தொடங்கியது.15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
அடுத்து களமிறங்கிய சிவம் துபேவுடன், அம்பத்தி ராயுடு ஜோடி ,ரஹானே சொற்ப ரன்களில் வெளியேறினார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜடேஜா, பவுண்டரிக்கு விரட்டி சென்னை அணியை த்ரில் வெற்றிபெறச் செய்தார்.
பலரும் இந்த வெற்றி குறித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்குக் கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் எங்கள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை,எங்கள் பணி மீதான நம்பிக்கை என அடிப்படையில் 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்று பாஜக அமையும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக வலுவான தோற்றம், மிகப் பெரிய கூட்டம் இருந்தும் தமிழ் நாட்டில் வெற்றி பெற முடியவில்லை.குஜராத் அணிக்கு எதிராக CSK வெற்றி பெற்றதை போன்று அகில இந்திய அரசியலில் வெற்றி பெற முடியும் என திமுக அமைச்சர் TRB.ராஜா கருத்து தெரிவித்ததற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக CSK-வில் வின்னிங் ரன் அடித்தது ஒரு பாஜக காரிய கர்த்தா.. ஜடேஜா ஒரு பாஜக காரிய கர்த்தா; அவர் மனைவி ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினர்; அவர் ஒரு குஜராத்காரர் பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சிஎஸ்கேவிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார் எனத் தெரிவித்து உள்ளார்.