கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான ‘எல் ஜி எம்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தோனி என்டர்டைன்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ள தோனி தமிழ் ரசிகர்களின் மேல் உள்ள அளவற்ற காதலால் தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்துள்ளார் .
அதன்படி தோனி மற்றும் சாக்ஷி தோனி இணைத்து தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். லவ் டுடே படத்தில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளைகொண்ட நடிகை இவானா ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, நதியா,மிர்ச்சி விஜய் , பூஜித்த ,VTV கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .
ரமேஷ் தமிழ்மணி இயக்கிய இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருக்கிறார். இந்நிலையல் LGM படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது . இதில் தல தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் கலந்துகொண்டு LGM படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை வெளியிட்டனர் .
இந்நிலையில் தற்போது LGM படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான கிரில் சிக்கன் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது . இதுவும் முதல் பாடலை போல இளசுகள் மத்தியில் செம வைரலாகி வருகிறது .
இதோ அந்த பாடலை நீங்களும் கேளுங்கள்…