தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுருளி அருவி (Suruli Falls) வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கம்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவியில் (Suruli Falls) குளிப்பதற்காக நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
தற்போது தேனி மாவட்டத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் சுருளி அருவிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியுள்ள நிலையில், சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டது.
இதனால், சுருளி அருவியில், நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அந்த அருவிக்கு குளிப்பதற்காக செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும், இந்த தடையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி காணப்பட்ட சுருளி அருவியில், வனப்பகுதியில் குட்டிகளுடன் கூடிய 8 யானைகள் முகாமிட்டு இருந்ததால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக சுருளி அருவியில் முகாமிட்டிருந்த யானைகளும் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்த நிலையில், தற்போது சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதித்துள்ளனர்.
கோடை காலம் என்பதால் சுருளி அருவியில் குளிப்பதற்காக வெளி மாவட்டத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விடுமுறையை கழித்து வருகின்றனர்.