குற்றவாளிகள் மற்றும் ரவுடிசத்தை கட்டுப்படுத்துவதற்கு காவலர்கள் துப்பாக்கி எடுத்து செல்வது ‘Part of the Duty’ என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது..
“காவல்துறை கண் எதிரே கொலை போன்ற பெரிய குற்றங்கள் நடக்கக் கூடாது, அப்படி நடக்கும் சமயங்களில் காவலர்கள் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது;
பயங்கர குற்றவாளிகளை நோட்டம் விடும் போது காவலர்கள் தங்களுடைய தற்காப்புக்காகவும் துப்பாக்கியை எடுத்து செல்கின்றனர்;
துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் எடுத்து செல்வதில்லை;
ஆனால் காவலரின் உயிருக்கு ஆபத்து வரும்போது அதை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது;
அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை தாண்டி , காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுக்க தயங்காது” என
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.