அதிமுக கட்சியில் தொடர்ச்சியாக பல குளறுபடிகள் ஏற்பட்டு வந்த சூழலில் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்
புரட்சி தலைவர் எம்ஜிஆர்,புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். தொண்டர்களுக்காகவே நான் இருப்பேன். இரு பெரும் தலைவர்களும் கடந்த 50 ஆண்டுகாலம் மனிதாபிமானத்தோடு தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று பல ஆண்டுகாலம் நல்லாட்சி நடத்தி இருக்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கிற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டது என்பது குறித்து கூடிய விரைவில் மக்களே அவர்களுக்கு நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு தொண்டர்கள் உறுதியாக உரிய பாடத்தையும் தண்டனையும் வழங்குவார்கள் .
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்திலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. கடந்த 2002 யில் மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சராக அரியணை ஏறுவதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இருக்கிறார்கள் அதில் “பன்னீர்செல்வம் போன்ற ஒரு தூய தொண்டனை பெற்றது எனது பாக்கியம் என சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்” இதை தவிர வேறு ஏதும் சான்றிதழை எனக்கு தேவையில்லை என நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எதிர்காலத்தை அதிமுகவின் உண்மை தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள் என்றார்.