கார் வைத்திருப்பவர்களா நீங்கள்? – உங்களுக்கான எச்சரிக்கை செய்தி

ஒரு மோசடி கும்பல், கார் உரிமையாளரை புதிய யுக்தியை பயன்படுத்தி, அவரது கவனத்தை திசை திருப்பி ஏமாற்றி திருடும் வீடியோவை ஈரோடு மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில், காரின் முன் சக்கரம் பஞ்சர் என்று இருசக்கர வாகன ஓட்டிகள் சொல்வதும், அதை அவர் பரிசோதிக்கும் போது ஒரு பெண் முகவரி கேட்பதும். அப்போது வேறு திசையிலிருந்து வரும் ஒருவர் அவரது காரின் கதவை திறந்து அதற்குள்ளிருக்கும் பொருளை திருடுவதும் விடியோவில் பதிவாகியுள்ளது.

இதில், ஓரிடத்தில் கூட ஏமாற்றப்பட்டவருக்கு நாம் எங்கே, எப்போது ஏமாற்றப்பட்டோம் என்பதை யூகிக்கமுடியாது. அந்த அளவுக்கு திட்டமிட்டு ஒரு மோசடிக் கும்பல் செயல்படுகிறது.

ஆகையால், கார் ஓட்டிகள், இதுபோன்று முன்சக்கரம் பங்சர் என்று சொன்னதும், அங்கேயே வாகனத்தை நிறுத்திவிடாமல், சிறிது தள்ளிச் சென்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு டயர்களை பரிசோதிப்பது நல்லது என்பதையே இந்த வீடியோ மூலம் நாம் அறிவதாகும்.

Total
0
Shares
Related Posts