லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் மிரட்டலான நடிப்பில் தற்போது செம ஸ்பீடில் உருவாக்கி வரும் படம் லியோ , திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையின் சில முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது .
முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் தளபதியின் 68வது படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற கேள்வி இணையத்தில் படையெடுத்து நின்றது.
அந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த AGS நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரப்போர்வை தகவல் வெளியாகி செம வைரலானது.
இதையடுத்து தளபதி 68 படத்தின் திரைக்கதையை உருவாக்கும் வேளைகளில் வெங்கட் பிரபு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் .இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தின் டைட்டில் குறித்த சிறப்பான தரமான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
நம்ப தளபதியின் 68வது படத்திற்கு ’சிஎஸ்கே’ என்ற டைட்டில் வைக்க இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர் வெங்கட் பிரபு என்பதும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் வெறித்தனமான ரசிகர் என்பதும் நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே . அதேபோல் தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக இருந்துவந்துள்ளார் .
இதன் காரணமாகவே சிஎஸ்கே என்ற டைட்டிலை ’தளபதி 68’ படத்திற்கு வெங்கட் பிரபு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது . இந்த தகவல் மட்டும் உறுதி செய்யப்பட்டால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்களும் மகிழ்ச்சியில் குத்தாட்டமே போட்டுவிடுவார்கள்,
இந்நிலையில் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி லியோ படத்தில் இருந்து புதிய அப்டேட் வருமா..? இல்லை தளபதியின் 68வது படத்தின் டைட்டில் வெளியாகுமா..? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .