அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான் அவர்கள் மீண்டும் அதிமுகவிற்குள் வர வாய்ப்பில்லை என அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
திருப்புகழ் கமிட்டி அளித்த பரிந்துரை அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட மறுப்பது நல்ல அரசாங்கத்திற்கு அழகல்ல.
ரெட் அலர்ட் கொடுத்த பிறகும் மழையே இல்லை; வெயில் தான் பிரகாசமாக இருக்கிறது. ஓரளவு பெய்த மழைக்கு ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அரசைப் பாராட்டியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது.
Also Read : வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிடி வாரண்ட்..!!
வேண்டுமென்றே திட்டமிட்டு சில ஊடகங்களும், பத்திரிகைகளும் அதிமுகவின் நன்மதிப்பை கெடுப்பதற்காக விளம்பரப்படுத்துகின்றன. தயவு செய்து விட்டு விடுங்கள்; எங்கள் தரப்பு தான் அதிமுக.
அதிமுகவில் கட்சி விரோத செயல்களை ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டு விட்டார்கள். அவர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்கள். அதிமுக இரண்டாக கிடைக்கிறது பிளவுபட்டுள்ளது என்று தயவு செய்து இனி பேசாதீர்கள். அதிமுக பிரிந்து கிடக்கவில்லை. பிரிந்து கிடக்கின்ற என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவ்வளவுதான் என தெரிவித்துள்ளார்.