புதுச்சேரியில் பாமக சார்பில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் மேடையிலேயே அன்புமணி – ராமதாஸ் வார்த்தைகளால் மோதிக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார் . இதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய ராமதாஸ் கட்சியை உருவாக்கியவன் நான். வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவை நான்தான் எடுப்பேன்” என ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Also Read :சென்னை அண்ணா பல்கலை மாணவியின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணம்..!!
“நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு. விருப்பம் இல்லாதவர்கள் யாராகினும் கட்சியிலிருந்து வெளியேறலாம்” என்று அன்புமணிக்கு மேடையிலேயே ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில் என்னிடம் பேச விரும்புபவர்கள் பனையூரில் புதிதாக கட்டியுள்ள எனது அலுவலகத்தில் இனி என்னை சந்திக்கலாம்” என்று அன்புமணி ராமதாஸ் தொண்டர்களிடையே தெரிவித்துள்ளார் .
ஏராளமான பாமக தொண்டர்கள் முன் பொதுக்குழு மேடையிலேயே அன்புமணி – ராமதாஸ் வார்த்தை போர் நடத்தியது தமிழக அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.