அதிமுகவில் உறுப்பினராக சேர கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் 19ம் தேதி வரை விண்ணப்பப் படிவங்களை அளிக்கலாம் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளரும் , சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக்கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு வருகின்றன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2 கோடி பேர்களை உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், இன்றைய தேதி வரை 1 கோடியே 60 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம்’ அமைந்திட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், கழகத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினார் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக் கெடுவை நீட்டித் தருமாறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 19.07.2023 மாலை 5 மணிவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுநியான கால அவகாசமாகும்.
புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, கழகப் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுயதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .