தமிழ்நாட்டிற்குள் பாஜக வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என தமிழக பாஜக தலைவரும் ( kovai )கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை அங்கு கூட இருந்த மக்களிடம் கூறியதாவது :
செம்மறி ஆடு கூட்டம் கூட 10 நாளில் தனது தலைவன், தலைவியை கண்டுபிடித்து விடும். ஆனால் இந்தியா கூட்டணி தலைவரே இல்லாத கூட்டணியாக இருக்கிறது.
Also Read : https://itamiltv.com/bjp-candidate-l-murugan-announced-his-election-promise-for-nilgiri-constituency/
தமிழ்நாட்டிற்குள் பாஜக வரவேண்டிய நேரம் வந்துவிட்டது . பிரதமர் மோடியை தவிர வேறு யாராவது பிரதமரானால் என்னாகும் என்பதை சிந்தித்து பாருங்கள், நம் நாட்டை சின்னாபின்னமாக்கி விடுவார்கள்
மின்சாரத்தை நிறுத்திவிட்டு வாக்காளர்களுக்கு ₹1,000, ₹500 விநியோகம் செய்கிறார்கள் .
“ஜூன் 4.க்கு பின் என் வாழ்க்கை மாறும்” அதிமுக , திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின் (kovai) கூடாரம் கிழித்தெறியப்படும் தேர்தலில் கோவை மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் நிச்சயம் வெற்றிபெறுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.