அக்டோபர் 22ம் தேதி காலை 9 மணியளவில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து தற்போது வெளி மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை அக்டோபர் 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்றும் இதில் ஒரு நாளைக்கு 12,000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் அக். 23 முதல் தினமும் 10,000 பேருக்கு இலவச தரிசன நுழைவு சீட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.