9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை!

india achieves the landmark one billion covid19 vaccinations

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி முதலில் முன்களப்பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

india-achieves-the-landmark-one-billion-covid19-vaccinations
india achieves the landmark one billion covid19 vaccinations

அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts