திருப்பூரில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு வடமாநிலத்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூரில் தமிழர்களை வடமாநில இளைஞர்கள் கூட்டமாகச் சேர்ந்து தமிழக தொழிலாளரை தாக்கும் காணொளி கடந்த 27 ஆம் தேதி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனுபுர பாளையம், ஆத்து பாளையம், திருமுருகன் பூண்டி, வேலம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும்(1000) மேற்பட்ட ஏராளமான பின்னால் ஆடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த பனியின் தொழிற்சாலைகளில் ஒடிசா, ஜார்கண்ட், குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்
இந்த தொழிற்சாலைகளில் தமிழக தொழிலாளர்கள் விட வடமாநில தொழிலாளர்கள் தான் அதிகம் அதிகம் வேலை செய்து வருகின்றனர்.
மேலும் அனுப்பர்பாளையம், கேளப்பாளையம், செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பணியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 100 க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழக தொழிலாளர்களை விரட்டி விரட்டி,கட்டையால் விரட்டி விரட்டி துரத்தித் தாக்கும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்து கேளம்பாளையம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பொட்டி கடையில் முறையில் சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகத் தமிழ் தொழிலாளர்கள் வட மாநில தொழிலாளர்களைத் தாக்கியுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த வட மாநில தொழிலாளர்கள் பதில் தாக்குதலாகத் தமிழக தொழிலாளர்களை இடைவார் ரோட்டு கடை போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய உள்ளன.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் காமெடி நடிகர் தற்பொழுது ஒரு பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளார்.
https://youtu.be/Vq4OGW8TA7A
2 வடமாநிலத்தவர்கள் கைது – அதிரடி கைது:
திருப்பூரில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்களை பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு அடித்து விரட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை அடுத்து தமிழர்கள் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து பீகாரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல், வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய தமிழக இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.