தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த 63.30 கோடி மதிப்பிலான புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரிடர் காலத்தில் அல்லது அசாதாரண சூழலில் பொதுமக்களுக்கு உதவிட வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட 3 ஊர்திகள், 7 அதிஉயர் அழுத்த நீர்தாங்கி வண்டிகள், 20 வாட்டர் பவுசர் வாகனங்கள், 25 புதிய நீர்தாங்கி வண்டிகள், மாவட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 16 ஜீப்கள், பேரிடர் நேரங்களில் ஆட்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் செல்லும் 2 ஊர்திகள் உள்பட சுமார் 63.30 கோடி மதிப்பிலான புதிய வாகனங்கள் இன்று நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்க அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இத்தேபோல் தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் சார்பில், தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் பயிற்சி நிலையத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சியும், 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.