vijay political-நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சிக்கு திரைத் துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு அரசு முறைப் பயணமாக புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று (பிப்ரவரி 7ஆம் தேதி) தமிழ்நாடு திரும்பினார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்கள் வாழ்த்துகளை எல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ்நாட்டுக்குப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டுத் திரும்பி இருக்கிறேன்.
அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த ஜனவரி 29ஆம் தேதி சென்றேன்.
இதையும் படிங்க: TR Balu Controversy Speech-“அண்ணாமலையெல்லாம் பெரியவரா..” கொதித்த டிஆர் பாலு!
முதல் நிகழ்வாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் முதலீட்டாளர் மாநாடு நடந்தது.
அதற்கு ஸ்பெயின் நாட்டில் இருக்கின்ற பல்வேறு தொழில்துறை குழும நிர்வாகிகள் எல்லாம் வந்திருந்தார்கள்.
ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன்.
இந்த பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹபக் லாய்டு நிறுவனம் ரூ. 2500 கோடிக்கு முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல், எடிபான் நிறுவனம் ரூ. 540 கோடியும், ரோக்கா நிறுவனமும் ரூ.400 கோடியும் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755145681126527481?s=20
மேலும் நடிகர் விஜய் அரசியல் கட்சி (vijay political) தொடங்கியுள்ளது குறித்த கேள்விக்கு,”மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் யென பதிவு செய்து கட்சியின் பெயரை அறிவித்தார்.
இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri kazhagam)வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியிருந்தார்.
அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
PUBLISHED BY : S.vidhya