5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்.13 ஆம் தேதி சட்டப்பேரவையில், ”கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும்” என அறிவித்தார்

இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் 31,2021 வரை பொதுமக்க பெற்ற நகைக்கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அரசுக்கு ஆகும் செலவு ரூ.6ஆயிரம் கோடி எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Total
0
Shares
Related Posts