6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. திருக்குறள் உடன் அவையை சபாநாயகர் அப்பாவு தொடக்கி வைத்தார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்தது. தனது புதிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை ஆகஸ்டு 13-ந்தேதி தாக்கல் செய்தது.
இந்த நிலையில், 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆன இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதமில்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்களை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சங்களில் பிரதானமாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மேல் படிப்புக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.