பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27ஆவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்தரில் நடப்பாண்டுக்கான தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 12ஆம் தேதி முதல் முதல் 28ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது . இந்த தொடரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திறமையான மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன .
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு – ஹரியானா அணிகள் மோதியது .
அனல் பறக்க நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது .
இந்நிலையில் தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.