சிங்கப்பூரில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ள இளம் வீரர் குகேஷுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 கோடி பரிசு அறிவித்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது . மொத்தம் 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை தமிழக வீரர் குகேஷ் எதிர்கொண்டார்.
Also Read : புஷ்பா 2 சிறப்பு காட்சியில் பெண் பலி – நடிகர் அல்லு அர்ஜுன் கைது..!!
கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தச் சுற்றில் தனது அபார நகர்வால் குகேஷ் வெற்றிப் பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியனான மிக இளம் வயது வீரர் எனும் பெருமையை குகேஷ் பெற்றுள்ளார் . இதுமட்டுமின்றி விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற 2வது தமிழக வீரர் எனும் பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இளம் வயதில் வரலாறு படைத்துள்ள குகேஷுக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வரும் நிலையில் தற்போது குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.