இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உயிரை பணயம் வைத்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு உதவிகளை செய்து வந்தாலும் ஒவ்வரு முறை கடலுக்கு செல்லும் போதும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை செய்யும் கொடூரங்கள் சொல்லிலடங்காதவை.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகையை ₹250ல் இருந்து ₹350-ஆக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளர்களுக்கான நிவாரணம் ₹6 லட்சமாக உயர்த்தியும் . நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ₹2 லட்சமாக உயர்த்தியும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .