நடப்பாண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் செல்வ பிரபுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு : மதுரையை சேர்ந்த திருமாறன் என்பவரின் மகன் செல்வ பிரபு கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில், மும்முறை நீளம் தாண்டுதலில் 16.78 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்று வரலாறு படைத்தார்.
இந்நிலையில் ஏசியன் அத்தலட்டிக் அசோஷியன் சார்பில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள போட்டியில் மாபெரும் சாதனை செய்தமைக்காக, நடப்பாண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜீலை 10 ஆம் தேதி பாங்காக்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் செல்வபிரபுவுக்கு விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தாய்நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்ந்த இந்த இளம் காளைக்கு நாட்டுமக்கள் ,அரசியல் தலைவர்கள் ,திரை பிரபலங்கள் என பலரும் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .
அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் செல்வபிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்துத் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறன் அவர்களுக்குப் பாராட்டுகள் என தெரிவித்துள்ளார் .
இதேபோல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
ஆசியாவின் சிறந்த ஜுனியர் (U20) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் Triple Jump வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். AsianAthleticsAssociation-ன் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்குக் கழக அரசு என்றும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.