முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் Spanish factories ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லோஸ் வெலாஸ்குவேஸ், இந்திய இயக்குநர் நிர்மல் குமார் ஆகியோர் சந்தித்தனர் .
பெருந்துறையில் புதிய குழாய்கள், இணைப்புகள் உற்பத்தி, விரிவாக்கம் செய்யும் தொழிற்சாலை நிறுவிடுவது குறித்தும் . ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரஃபேல் மேடியோ, நீர் பிரிவு முதன்மை செயல் அலுவலர் மானுவல் மஜோன் வில்டா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் .
தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து தொழில்துறை அமைச்சர் அவர்களும் முதலீடு செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தமிழ்நாட்டில் நிலவி வரும் சாதகமான சூழல் பற்றி விளக்கினார்கள்.
இந்த கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது .
அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவிடவும், இராணிப்பேட்டையிலும்
பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.
மேலேயும் இச்சந்திப்புகளின் போது, ‘Guidance’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு.வே.விஷ்ணு ஆகியோர் உடனிருந்தார்.
காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும்,
இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து.
Also Read : https://itamiltv.com/jeweler-shop-owner-who-filed-false-complaint/
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது என்றும், எனவே இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்று முதலமைச்சர் அவர்களும் எடுத்துரைத்தார்கள்.
பிப்ரவரி 7 ஆம் தேதி வரை ஸ்பெயின் நாட்டில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு இன்னும் பல தொழிற்சாலைகளின் Spanish factories நிறுவனங்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளார்.