மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக (tngovt) தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதியன்று நடைபெற உள்ளதை அடுத்து , போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது .
இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை இணை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
Also Read : https://itamiltv.com/fishermen-affected-eps-kattam/
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி கூறியதாவது :
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்.17 மற்றும் ஏப்.18 ஆகிய தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 7,154 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,124 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு, வரும் ஏப்.20 மற்றும் ஏப்.21 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 1,825 சிறப்பு பேருந்துகள், இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தமாக 6,009 பேருந்துகள், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 8,304 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார் .
எதிர்வரும் இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ( tngovt ) அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தலின் முடிவில் எந்த கட்சி வெற்றிபெற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.