பத்திரிகையாளர்கள் பணியின்போது மரணமடைந்தால் வழங்கப்படும் நிவாரண நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது இறந்தால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி
15 ஆண்டு பணியாற்றி பணியில் இருக்கும்போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.7.5லட்சம் நிதி
Also Read : லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியானது..!!
10 ஆண்டு பணியாற்றி பணியில் இருக்கும்போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி
5 ஆண்டு பணியாற்றி பணியில் இருக்கும்போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம்
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தினர் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்த 24 மணி நேரத்தில் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.