குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படவுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி செயலாளர் பி. உமா மகேஸ்வர் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி குருப்-2, குருப்-2-ஏ முதல்நிலைத் தேர்வு மற்றும் குருப்-4, குருப்-3, குருப்-7-பி, குருப்-8 மற்றும் சிறை அலுவலர் தேர்வு, உதவி சிறை அலுவலர் தேர்வு ஆகியவற்றுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான (கொள்குறிவகை) மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாணயத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று புதிய பாடத்திட்டத்தை தெரிந்துகொள்ளலாம்.
குருப்-2 மற்றும் குருப்-2-ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. அதேபோன்று குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு பி.உமா மகேஸ்வரி கூறியுள்ளார்.