சர்வதேச சந்தையின் நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37,320 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 31 குறைந்து ரூ.4,665 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.68,200 க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 400 குறைந்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 67,800 விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.