தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று 3 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இந்த மூன்று நாட்களும் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.