இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மாலை கோலாகலமாக தொடங்க உள்ளது .
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5 , 20ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது .
இதில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 12 ஆம் தேதி இன்று இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு டொமினிகாவில் உள்ள மைதானத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடும் ஹிட் மேன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பி.சி.சி.ஐ ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
அதன்படி முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12 முதல் 16 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20 முதல் 24 வரையும் நடைபெறுகிறது . ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
டி20 போட்டிகளை பொறுத்தவரை ஆகஸ்ட் 3, 6, 8, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி டெஸ்ட் போட்டிகள் இரவு 7.30 மணிக்கும், ஒருநாள் போட்டிகள் இரவு 7 மணிக்கும், 20 ஓவர் போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். இதேபோல் டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார்.
இதுமட்டும்மல்லாமல் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக அபாரமாக ஆடிய ஐதராபாத்தை சேர்ந்த 20 வயதான திலக் வர்மா புதுமுக வீரராக இந்திய டி20 அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் இன்று தொடங்கி விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.