இந்தியாவிற்காக ஒலிம்பிக்,காமென் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பிறந்த தினம் இன்று.
1995ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பி.வி.ரமணா மற்றும் பி. விஜயா தம்பதிக்கு மகளாக பிறந்தார்.பி.வி.சிந்து. இவரது பெற்றோர் இருவரும் வாலிபால் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள்.
பி.வி சிந்து தன்னுடைய 6ம் வயதிலேயே கோபிசந்தின் பேட்மிட்டன் விளையாட்டால் ஈர்க்கப்பட்டு பேட்மிட்டன் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்.
2009ல் நடந்த சர்வதேச பேட் மிட்டன் போட்டியில் பங்கேற்று முதல் வெங்கல பத்தகத்தை சிந்து வென்றார். இதனையடுத்து 2012ம் ஆண்டு சீனா ஓபன் பேட்மிட்டன் போட்டியில் லீசுரோவை தோற்கடித்தார்.
தொடர்ந்து விளையாடிய சிந்து 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் விளையாட்டில் பங்கு பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
தொடர்ந்து சிறிய சிறிய வெற்றிகளையும், பல போட்டிகளில் தோல்வியையும் பெற்று வந்த சிந்து கடந்த 2022ம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.
இப்படி தன இலக்கை எட்டும் உத்வேகத்தோடு தொடர்ந்து போராடி வெற்றிகளை குவித்து வரும் சிந்து இன்று தனது 28ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.