சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் பரவிய கொரோனா தொற்று காரணமாக தொழில் துறையில் ஏற்பட்ட சரிவால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை விலை ஓரளவு குறைந்தது.
இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் தாக்கத்தால் ஏற்பட்ட பங்கு சந்தை சரிவால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது. தங்கத்தின் விலையானது மூண்டும் அதிகரித்தது. இருந்த போதிலும் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது.
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைத்துள்ளது. அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு சவரன் ரூ.39,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை ரூ.14 குறைந்து ரூ.4,945-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்த வரையில் ஒரு கிராம் ரூ.71.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது