ரஷ்ய அணுசக்தி பாதுகாப்புப் படைத் தலைவர் மாஸ்கோவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் அனுமான் வால் போல் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில் இரு நாடுகளுக்கும் உயிர்சேதம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது .
இந்த போரில் உக்ரனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரம் மற்றும் ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் ரஷ்யாவில் உள்ள சில பகுதிகளில் உக்ரைன் தந்திர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய நாட்டின் அணுசக்தி பாதுகாப்புப் படைத் தலைவர் மாஸ்கோவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய ஆயுதப் படைகளின் கதிர்வீச்சு, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்புப் படைகளின் தலைவர் இகோர் கிரில்லோவ் மாஸ்கோவில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின்சார ஸ்கூட்டரில் வெடிகுண்டு வைத்து அவர் மீது திட்டமிட்டு கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் குண்டு வெடிப்பில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது