விருதுநகர் மாவட்டத்தில், கணவனுக்கு ஏற்பட்ட விபரித ஆசையால் உடலுறவின்போது (torch light) மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோவில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த 50 வயதாகும் வனராஜ் என்ற நபர் மலையடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
வனராஜிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி இருந்த நிலையில், அவர் மீண்டும் கணவனைப் பிரிந்து தனியே தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த 28 வயதாகும் இயேசு ராணி என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு அதே தோட்டத்தில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் பிள்ளைகள் இருவரும் உறங்கிய பின்னர், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அறையின் மாடியில் வனராஜும் அவரது மனைவி இயேசு ராணியும் தங்கியதாக கூறப்படும் நிலையில், காலையில் எழுந்து பார்த்தபோது இயேசு ராணி உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த வனராஜ், மனைவி இறந்தது குறித்து நீண்ட நேரத்திற்கு பிறகே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இயேசு ராணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, காவல்துறையினர் வனராஜுவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
அதில், வனராஜும் இயேசு ராணியும் சம்பவத்தன்று இரவு மோட்டார் அறையில் தங்கியிருந்த போது, ஒன்றாக அமர்ந்து மது அருந்தி இருக்கிறார்கள். பின்னர், மது போதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
அப்போது, தன்னால் இதற்கு மேல் முடியாது என இயேசு ராணி மறுப்பு தெரிவித்த நிலையில், வனராஜ் தனது கையில் இருந்த டார்ச் லைட்டை (torch light) கொண்டு மனைவியின் உறுப்பில் வைத்து அழுத்தி இருக்கிறார்.
இதனால், அலறித் துடித்த இயேசு ராணி அதிக இரத்தப்போக்கு வெளியேறி சம்பவ இடத்திலேயே இறந்ததாக வனராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.