அமெரிக்காவில் பீட்சா டெலிவரிக்கு குறைவான டிப்ஸ் கொடுத்த கர்ப்பிணி பெண்ணை தாக்கி விபரீதமான செயலில் ஈடுபட்ட பெண் ஊழியரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் பீட்சா டெலிவரியின் போது டிப்ஸாக வெறும் $2 டாலர் மட்டுமே கொடுத்த கர்ப்பிணியை 14 முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ப்ரியானா என்ற 22 வயது இளம் பெண்ணை அந்நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read : ஜன.3ல் பா.ஜ.க. மகளிரணி நீதிப்பேரணி – அண்ணாமலை அறிவிப்பு..!!
காயமடைந்த கர்ப்பிணி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில் . கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த ப்ரியானாவின் நண்பரையும் கைது செய்துள்ள போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்ப்பிணி என்றும் பார்க்காமல் ஒரு பெண்ணை இன்னொரு பெண் கொடூரமான தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.