தென்கிழக்கு ஆப்கானிஸ்தான் கோஸ்ட் நகருக்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் 130 பேர் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில்உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை பக்டிகா மாகாணத்தில் பதிவாகி உள்ளன. நிலநடுக்கம் காரணமாக அங்கு 100 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 250 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தலிபான் நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணங்களான கோஸ்ட், நங்கர்கார் மாகாணங்களிலும் கட்டிடங்கள் இடிந்து விழந்ததில், பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலக்கடுக்கம் அதிகாலை 2.24 மணியளவில் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.