சாலை விபத்தில் குடும்பத்தை இழந்த நபர் 36 ஆண்டுகளாக போக்குவரத்தை சரிசெய்தும் குடும்ப உறவுகள் குறித்து விழிப்புணர்வு கொடுக்கும் தன்னார்வலராக வலம் வருகிறார்.
சீனாவில் மனைவி, சகோதரி மற்றும் 4 குழந்தைகளை சாலை விபத்தில் இழந்த ஜாங் ஐக்விங் என்ற 74 வயது முதியவர் சுமார் 36 ஆண்டுகளாக போக்குவரத்தை சரிசெய்யும் தன்னார்வலராக செயல்பட்டு வருகிறார்.
Also Read : பாலியல் வழக்கில் கைதான சுதாகர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்..!!
தன்னை போல யாரும் குடும்ப உறவுகளை இழக்க கூடாது என்பதற்காக இந்த செயலை ஜாங் செய்ய தொடங்கியுள்ளார். இதுமட்டுமன்றி தனது வாழ்வாதாரத்திற்காக பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் வேலையையும் ஜாங் ஐக்விங் செய்து வருகிறார்.
அனைவரிடமும் அன்புடன் பழக்கூடிய நபராக விளங்கும் இவர் எப்போதும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் குறித்து அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாவும் தெரிவித்துள்ளார்.