Site icon ITamilTv

ரத்து செய்யப்பட்ட 23 ரயில்கள்.. – முன்பதிவு கட்டணங்களின் கதி என்ன?

Spread the love

ரத்து செய்யப்பட்ட 23 ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டுளது. இதன் காரணமாக அந்த பாதையில் செல்லும் 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூரு – சென்னை சதாப்தி, சென்னை – கோவை சதாப்தி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. ஜோலார்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா அரக்கோணம் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட 23 ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version