மும்பையில் ரயில் ஓட்டுநர் ஒருவர், தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை ரயிலை நிறுத்தி சாமார்த்தியமாக காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது.
மும்பையில் நேற்று காலை 11.45 மணி அளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் வருவதை கண்டு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்காக அவ்வாறு செய்தாரா அல்லது குடி போதையில் செய்தாரா என தெரியவில்லை.
ஆனால் ரயில் அருகில் வந்துவிட்ட நிலையில், ஒருவர் படுத்திருப்பதை அறிந்த ரயிலின் ஓட்டுநர் சட்டென்று பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்திவிட்டார். உடனடியாக ரயில்வே போலீசார் ஓடிவந்து படுத்திருந்த நபரை காப்பாற்றினர்.இந்த வீடியோவை பகிர்ந்த ரயில்வே அமைச்சகம் ஓட்டுநரை பாராட்டி, மக்களின் உயிர் விலைமதிப்பற்றது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
मोटरमैन द्वारा किया गया सराहनीय कार्य : मुंबई के शिवड़ी स्टेशन पर मोटरमैन ने देखा कि एक व्यक्ति ट्रैक पर लेटा है उन्होंने तत्परता एवं सूझबूझ से इमरजेंसी ब्रेक लगाकर व्यक्ति की जान बचाई।
आपकी जान कीमती है, घर पर कोई आपका इंतजार कर रहा है। pic.twitter.com/OcgE6masLl
— Ministry of Railways (@RailMinIndia) January 2, 2022
இந்த வீடியோவை இதுவரை 93,000 பேர் பார்த்துள்ளனர். 5,700 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ரயில் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.