தமிழ்நாட்டில் 21 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் (transfer) செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில், 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் (transfer) செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி,
- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- மாநில குற்றப்பதிவுப் பணியக காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா நியமனம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- மேலும், சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக ரோகித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய டிஜிபி கருணாசாகர், காவலர் நலன் டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த சாம்சன், தென்காசி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- மேலும், தென்காசி மாவட்ட எஸ்பி செந்தில்குமாரை, அமலாக்கத்துறை எஸ்பியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தஞ்சை மாவட்ட எஸ்பியாக ஆஷிஸ் ராவத் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
- அதேபோல, சிவகங்கை எஸ்பியாக செல்வராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- மேலும் அன்கிட் ஜெயின், ஸ்ரேயா குப்தா உள்ளிட்ட 7 ஏஎஸ்பிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.