இத்தாலி நாடாளுமன்றத்துக்கு (parliament)கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்.பி இருக்கையில் அமர்ந்தவாறு குழந்தைக்கு பாலூட்டியதற்கு சக எம்பிக்கள் பாராட்டு தெரிவித்துள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குழந்தை பெற்ற தாய்மார்கள் மீண்டும் வேலைக்குத் செல்லும் போது , பல சிரமங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். கைக்குழந்தையையும் கவனிக்க முடியாமல், வேலையிலும் கவனம் செலுத்தமுடியாமல் அவர்கள் படும் சிரமங்கள் ஏராளம்.
இதற்கு, தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் பிரதிநிதிகளாக பேரவைக்குச் செல்லும் பெண் அரசியல்வாதிகளும் விதிவிலக்கு இல்லை. தன் கைக்குழந்தையை ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்துக்கே எடுத்துச்சென்ற நியூஸிலாந்து பிரதமர் அசர வைத்தார்.
இதேபோன்று ஒரு சம்பவம் இத்தாலி பாராளுமன்ற(parliament) நடைபெற்றுள்ளது.இத்தாலி ரோமில் உள்ள 36 வயதான கில்டா ஸ்போர்டியெல்லோ பாராளுமன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.இந்த நிலையில்,பாராளுமன்றத்தில் இரண்டு மாத மகன் ஃபிரடெரிகோவை அழைத்து வந்திருந்தார்.
அப்போது குழந்தை பாலிற்காக அழுத தனது குழந்தைக்கு பாராளுமன்ற இருக்கையில் அமர்ந்து தாய்ப்பால் கொடுத்தார். இதனை கண்ட சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகளை தட்டியும், கோஷங்கள் எழுப்பியும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.