நிதியமைச்சர் பழனிவேல தியாகராஜனைக் கட்சியில் வைத்துக் கொள்வதா இல்லை கட்சியிலிருந்து நீக்குவதா என்ன தெரியாமல் திமுக திணறி வருகிறது என மூத்த அரசியல் விமர்சகர் சுதன்ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில்,30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும் எப்படி இவ்வளவு பெரிய தொகையைக் கையாளப் போகிறார்கள் என்பதே தற்பொழுது சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் செய்தியாளர் ஒருவரிடம் பேசியதாகக் கடந்த சில தினங்களுக்கு முன் ஆடியோ ஒன்று பரவியது.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன், அந்த ஆடியோவில் வருவது தன்னுடைய குரல் இல்லை இது ஒரு மோசடி என்றும் இப்படிப்பட்ட ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்திருந்த நிலையில்,
புதிய அமைச்சர் பழனிவேல தியாகராஜன் ஆடியோ குறித்து விசாரணை நடத்தக் கோரி பாஜக நிர்வாகிகள் டி பி துரைசாமி கரு நாகராஜன் உள்ளிட்டோர் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் இப்படிப்பட்ட சர்ச்சையை முடிவுக்கு வராத நிலையில் மீண்டும் ஒரு ஆடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைபேசியதாக ஆடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.
அந்த ஆடியோவில் நான் அரசியலில் வந்த நாள் முதல் ஒரு நபர் ஒரு பதவி என்ற திமுக கொள்கைக்கு நான் அரசியலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறேன் பாஜகவிடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். முதல்வரின் மருமகனும் மகனும் தான் கட்சியை நடத்துகின்றனர் என்ற பேச்சு ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆடியோ குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாத நிலையில், அடுத்தடுத்து இது போன்ற நடக்கும் சம்பவங்களால் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது