தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்தே உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் அதற்கு வலுசேர்க்கும் வகையில் திருச்சி திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1 ஆண்டாகவே திமுக எம்எல்ஏ -க்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் நேரில் கோரிக்கை விடுத்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என்று ஒருமனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.