திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சிவா வீட்டிற்கு முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ராஜாகாலனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி சிவாவின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டிற்கு அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பூங்கா ஒன்று திறப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்த போது,
திடீரென அமைச்சரின் காரை வழிமறித்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சிக்கு திருச்சி சிவாவை அழைக்கவில்லை எனவும், பூங்கா திறப்பு விழா அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் போடவில்லையெனவும், தங்களது ஆதங்கத்தை கோரிக்கையாக வைக்க முற்பட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அமைச்சரின் காரை வழிமறித்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 10 பேரை காவல்துறை தடுத்து நிறுத்தி பாதையை சரிசெய்தனர்.
இதனையடுத்து அமைச்சர் கே.என்.நேரு பூங்காவை திறந்து வைத்துவிட்டு சென்றார். அப்போது, அவரது காருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 10 பேரை காவல்துறை கைது செய்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள், நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.
திருச்சி சிவாவின் வீட்டில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் திருச்சி திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி சிவா மற்றும் KN. நேரு இருவரும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர்.
அந்த வீடியோ பார்க்க: