நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம், ஆனால் வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணிப்பதை அனுமதிக்க முடியாது என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியதாவது :
நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம், வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணிப்பதை அனுமதிக்க முடியாது. 3வது மொழியை திணிக்கும் மும்மொழி கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம்.
Also Read : அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – ஈபிஎஸ் கண்டனம்..!!
எந்த பெரிய கட்சிக்கும் சளைத்தது அல்ல தவெக, விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த உள்ளோம். தவெக பூத் கமிட்டி மாநாட்டுக்கு பிறகு எங்களின் பலம் அனைவருக்கும் தெரியும் என விஜய் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கட்சியின் பொறுப்பாளர்கள் பேச பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கு தடபுடலான விருந்து பரிமாறப்பட்டது.