நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி உள்ள ‘குண்டுர் காரம்’ (Twitter Movie Review) படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி உள்ளது .
த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் சிறப்பாக தரமாக உருவாகி உள்ள இப்படம் சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி உள்ளது .
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரைலரில் இருப்பது போல் காட்சிக்கு காட்சி வரும் அதிரடியான ஆக்சன்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது .
சிவப்பு நிற ஜீப்பில் செம மாஸாகவும் ஸ்டைலாகவும் வரும் மகேஸ் பாபுவின் அந்த காட்சி வேற லெவலில் பேச பட்டு வருகிறது.
பாத்த உடனே மஜா ஆச்சா? ஹார்ட்-ரேட் எகிறிச்சா? விசில் அடிக்கணும்னு தோணுச்சா’ என வசனம் பேசும் நம்ப தலைவனின் நடிப்பை பத்தி சொல்லவேண்டும் என்று அவசியம் இல்லை.
நடிப்பு, நடனம் என அனைத்திலும் மகேஷ் பாபு மிரட்டியுள்ள இப்படத்தின் கதை விறுவிறுப்பாக செல்வதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ஏக போக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் மகேஷ் பாபு சரி வர தமிழ் படங்களில் நடிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே உள்ளது.
இருப்பினும் இந்த படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Also Read : https://itamiltv.com/social-account-name-of-captain-vijayakanth-changed/
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ்,
சிவகார்த்திகேயனின் அயலான் அருண் விஜய்யும் மிஷன் சாப்டர் 1 மற்றும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் ஆகிய திரைடபங்கள் இன்று ஒரே நாளில் வெளியாகி உள்ளது .
இந்நிலையில் இந்த பொங்கலுக்கு பல மாஸ் ஹீரோக்களின் படங்கள் வந்துள்ள நிலையில் இதில் எந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றியை பெற போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள குண்டூர் காரம் (Twitter Movie Review) படம் குறித்து ரசிகர்களின்ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.